ஹயாத் ஹோட்டலில் கத்துக்குட்டி!”


avatar

ஹயாத் ஹோட்டலில் கத்துக்குட்டி!”  Kaththukkuttai-in-hyatt-hotel

சென்னையில் மிகப் பிரசித்தியானது தேனாம்பேட்டையில் இருக்கும் ஹயாத் ஸ்டார் ஹோட்டல். இந்த ஹோட்டலில் ஷூட்டிங் நடத்த பெரிய பெரிய பிரபலங்களே ஆசைப்படுவார்கள். ஷங்கர், கே.வி.ஆனந்த், கே.எஸ்.ரவிக்குமார் ஆகிய மூவரும் தங்கள் படங்களின் கதை விவாதங்களையே இந்த ஹோட்டலில்தான் நடத்துவார்கள். ஐ படத்துக்கு ஷங்கர் இங்கே ஷூட்டிங் நடத்த விருப்பப்பட்ட போது 'கூட்ட நெருக்கடி ஏற்படும்' எனச் சொல்லி அனுமதி கொடுக்க மறுத்தது ஹோட்டல் நிர்வாகம். இப்போது ரஜினி நடிக்கும் 'லிங்கா' படத்துக்காக ஹயாத் ஹோட்டலில் பத்தாவது தளம் வாடகைக்குக் கேட்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், ரஜினியை வைத்து ஷூட்டிங் நடத்தினால் பாதுகாப்பு தொடங்கி பல விஷயங்களில் சிக்கல் ஏற்படும் எனத் தயங்கி யோசித்து அனுமதி தருவதாகச் சொல்லிவிட்டது ஹோட்டல் நிர்வாகம். இதற்கிடையில் நரேன் - சூரி இணைந்து நடிக்கும் 'கத்துக்குட்டி' படத்தின் ஷூட்டிங்கை வெற்றிகரமாக ஹயாத் ஹோட்டலில் நடத்தியிருக்கிறார்கள். ஹோட்டலின் ஒன்பதாவது தளத்தில் சிறப்பு அனுமதி பெற்று ஷூட்டிங் நடத்தப்பட, இந்த விஷயம் கோடம்பாக்கம் முழுக்கப் பரவி, பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. பிரமாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தக் காட்சி 'கத்துக்குட்டி' படத்தில் பெரிதாகப் பேசப்படுவதாக இருக்கும்.

See more: http://kaththukkutti.com/kaththukkutti-in-hyatt-hotel.html

ஹயாத் ஹோட்டலில் கத்துக்குட்டி!”  Kaththukkuttai-hyatt-hotel

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!