One More Cinema#1
avatar
New Membe
9/6/2014, 1:17 pm
கார்த்தி அடுத்து நடிக்கும் படத்தின் தலைப்பு மெட்ராஸ் என்பது உறுதியாகியுள்ளது. படத்தின் இசை வெளியீடு அடுத்த வாரம் நடக்கிறது.

பிரியாணி படத்துக்குப் பிறகு கார்த்தி நடிக்கும் படம் இந்த மெட்ராஸ். ஆரம்பத்தில் இந்தப் படத்துக்கு காளி என்று தலைப்பிட்டனர். ஆனால் அந்தத் தலைப்பு மிகவும் உக்கிரமாக இருப்பதாக, கார்த்தி குடும்பத்தினர் கருதியதால், கபாலி என்ற தலைப்பை இயக்குநர் பரிந்துரைத்தார்.

ஆனால் இப்போது மெட்ராஸ் என்ற தலைப்பைச் சூட்டியுள்ளனர். வட சென்னையை மையப்படுத்தி படத்தை எடுப்பதால் இந்தத் தலைப்பு பொருத்தமாக இருக்கும் என கார்த்தியும் ஓகே சொல்லியுள்ளார்.

கார்த்திக்கு ஜோடியாக கேதரின் தெரசா என்ற தெலுங்கு நடிகை நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, அட்டகத்தி படம் இயக்கிய ரஞ்சித், மெட்ராஸ் படத்தை இயக்குகிறார்.

படத்தின் பாடல்கள் வரும் ஜூன் 13-ம் தேதி வெளியாகின்றன. இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் மீண்டும் தன் இடத்தை உறுதிப்படுத்தும் என நம்புகிறார் கார்த்தி.

காளி... கபாலி.. இப்போ மெட்ராஸ்!

Posted In: One More Cinema

Topic No: 275


Welcome:

Post your free thoughts on Facebox

Post no conditions, without approval

Unlimited number of posts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO