மஞ்சு வாரியார் மனதளவில் என்னைக் கொடுமைப்படுத்துகிறார்!- திலீப்


avatar

கொச்சி: தன் மனைவியும் நடிகையுமான மஞ்சு வாரியாரிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்று கோரி எர்ணாகுளம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் நடிகர் திலீப்.

இருவருக்கும் கடந்த 1999-ல் திருமணம் நடந்தது. ஒரு மகள் உள்ளார். நல்ல மனமொத்த இணை எனும் அளவுக்கு இருவரும் புகழ்பெற்று விளங்கினர். ஆனால் நடிகை காவ்யா மாதவன் வடிவில் திலீப் - மஞ்சு வாழ்க்கையில் பெரும் விரிசல் உண்டானது. காவ்யாவுடன் திலீப்புக்கு ஏற்பட்ட நெருக்கம் காரணமாக மஞ்சு வாரியார் பிரிந்து போனதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஒரு வருடமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். மகள் மீனாட்சியுடன் திலீப் தனது வீட்டில் வசித்து வந்தார். மஞ்சு வாரியர் பெற்றோருடன் வசிக்கிறார்.

இந்த நிலையில், நடிகை மஞ்சு வாரியாருடன் விவாகரத்து கேட்டு நடிகர் திலீப் எர்ணாகுளம் குடும்ப நீதிமன்றத்தில் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "நடிகை மஞ்சு வாரியார், என்னை மனதளவில் கொடுமைப்படுத்தி வருகிறார். இதனால் நான் மிகவும் பாதிப்படைந்துள்ளேன். எனது மனு மீதான விசாரணையை ரகசியமாக நடத்த வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மனு மீதான விசாரணையை அடுத்த மாதம் 23-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!