கோச்சடையான் இரண்டாம் பாகத்தை இன்னும் சிறப்பாக எடுப்போம்! - தயாரிப்பாளர்


avatar

கோச்சடையான் இரண்டாம் பாகத்தை இன்னும் சிறப்பாக எடுக்கத் திட்டமிட்டுள்ளோம் என்று கூறியுள்ளார் படத்தின் தயாரிப்பாளர் முரளி மனோகர்.

ரஜினி மூன்று வேடங்களில் தோன்றிய கோச்சடையான் படம் கடந்த 23-ம் தேதி வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 6 மொழிகளில் வெளியான கோச்சடையான் தென்னகத்தில் பெரும் வெற்றிப்படமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் வடஇந்தியாவில் படம் எதிர்ப்பார்த்த அளவுக்குப் போகவில்லை. இதை படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான டாக்டர் முரளிமனோகரே தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணிகளை விரைவில் ஆரம்பிக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "கோச்சடையானில் பயன்படுத்தப்பட்ட புதிய தொழில்நுட்பம் வட இந்தியாவுக்குப் புதிது. தென்னக மக்களைப் போல அவர்களால் இதை ரசிக்க முடியவில்லை.

எங்களுக்கு இருந்த பட்ஜெட், கால அளவில் ஒரு படத்தை இந்தத் தொழில்நுட்பத்தில் தந்திருக்கிறோம். இதில் சில குறைகள் இருக்கலாம். ஆனால் இதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகத்தில் அப்படி எந்தக் குறையும் இல்லாமல் சிறப்பாக எடுக்க கடுமையான முயற்சிகளை மேற்கொள்ளப் போகிறோம்," என்றார்.

கோச்சடையானின் அடுத்த பாகம்தான் ராணா. அநேகமாக இந்தப் படத்தை நிஜமான ரஜினி மற்றும் அனிமேஷன் ரஜினி என கலந்து எடுக்கலாம் எனத் தெரிகிறது.

கோச்சடையான் இரண்டாம் பாகத்தை இன்னும் சிறப்பாக எடுப்போம்! - தயாரிப்பாளர் 03-koc10

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!