சௌந்தர்யா ரஜினிகாந்தை சந்தித்தது மிகப் பெரிய தவறு: கன்னட இயக்குனர் பரபரப்பு புகார்


avatar

பெங்களூர்: சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா மீது கன்னட இயக்குனர் ராகவா த்வாரகி மோசடி புகார் தெரிவித்துள்ளார்.

கன்னட இயக்குனர் ராகவா த்வாரகி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளும், இயக்குனருமான சௌந்தர்யா பற்றி குற்றம் சாட்டியுள்ளார்.

சௌந்தர்யா ரஜினிகாந்தை சந்தித்தது மிகப் பெரிய தவறு: கன்னட இயக்குனர் பரபரப்பு புகார் Sounda10

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,

எனது படமான மத்தே முங்காருவின் போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் சென்னையில் உள்ள சௌந்தர்யா ரஜினிகாந்துக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவனத்தால் இழுத்தடிக்கப்பட்டது. சௌந்தர்யா ரஜினிகாந்தை சந்தித்தது தான் என் வாழ்வின் மிகப் பெரிய பேரழிவு ஆகும். அதனால் தான் என் கனவு படமான மத்தே முங்காரு தோல்வி அடைந்தது.

சௌந்தர்யாவின் அலட்சிய போக்கால், அவரது தயாரிப்பு நிறுவனத்தால் என் படத்தின் ரிலீஸ் தேதி பல முறை தள்ளி வைக்கப்பட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!